இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் தளபதி ரசிகர்கள் உட்பட பார்வையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் அடுத்த பிரச்சினையாக ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்று வெளிவந்துள்ளது.
லியோ திரைக்கு வரும் முன்னரே பல சர்ச்சைகளில் சிக்கி பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது. அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் முறையிட வழக்கு தொடரப்பட்டது ஆனால் 4 மணி காட்சி கிடையாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டால் 7 மணி காட்சி திரையிடலாம் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இதில் அடுத்த பிரச்சினையாக ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்று வெளிவந்துள்ளது. அனுமதியின்றி லியோ பேனர், ப்ளக்ஸ்கள் வைக்கக்கூடாது என மதுரைக்கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் லியோ பேனர்கள் மற்றும் பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளுக்கு தடை விதிக்க கூறி ஏற்கனவே உயர் நீதி மன்றத்திற்கு மனு சமர்ப்பித்திருந்த நிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டனர். லியோ திரைப்படம் இத்தனை சவால்களையும் தாண்டி வெளிவருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!