• Sep 20 2024

காதலனுடன் சேர்ந்து ரொமாண்டிக்கான போட்டோ வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு, தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இருப்பினும் தன்னுடைய தந்தையின் பெயரை எந்த இடத்திலும், பயன்படுத்தாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்திருக்கின்றார்.

இவர் நடிப்பதில் மட்டுமல்லாது நடனம் ஆடுவதிலும் பாட்டுப் பாடுவதிலும் சிறப்பான திறமை கொண்டவர்.இவர், நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகியிருந்த 'கிராக்', 'பிட்டா கத்தலு' போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த லாபம் திரைப்படம், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், காதலர் சாந்தனுவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளாடையோடு வெளியிட்டுள்ள வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் இருவருமே படு ரொமான்டிக்காக உள்ளனர். ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement