• Sep 20 2024

தாயுடன் பிரபல காய்கறி கடைக்கு சென்ற ஸ்ருதிஹாசன்-அடடே சரிகா இப்போது எப்படி இருக்கிறார் என்பதை பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் 7ம் அறிவு. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

இவர் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் சிறப்பாக நடனம் ஆடக் கூடியவராகவும் வலம் வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா ஆகியோரின் மூத்த மகள் என்பதும் தெரிந்ததே. அத்தோடு கமல் சரிகாவை கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கொண்டார்.இவர்களுக்கு அக்ஷ்ரா என்ற இன்னொரு மகளும் உள்ளார்.


மேலும் கமல்  2004ம் ஆண்டு மனைவி சரிகாவை விவாகரத்து செய்ததை அடுத்து அவர்  மும்பையில் வாழ்ந்து வருகிறார்.அண்மையில் சரிகா மும்பையில் உள்ள பிரபல காய்கறி கடைக்கு வர அவருடன் ஸ்ருதிஹாசனும் வந்துள்ளார். அப்போது இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement