• Sep 20 2024

வித்தியாசமாக கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்- அப்படி என்ன பண்ணியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் இறுதியாக விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து பிரபாஸுடன் இணைந்து 'சலார்'  படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படுகிறது.

கே ஜி எப் இயக்குநர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். ஜனவரி 2021 இல் தெலுங்கானாவின் கோதாவரிகானியில் படத்தின் முதன்மை படப்பிடிப்பு தொடங்கியது. இது தவிர இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள  வீர சிம்மா ரெட்டி படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 


பாலகிருஷ்ணாவை தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 


அதில், “எங்களிடமிருந்து உங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் !!! கிறிஸ்மஸ் தினத்தன்று கருப்பு மரத்தை நட்டு ஒரு வித்தியாசமான கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினோம், ஏனென்றால் நாங்கள் இருவரும் பயணம் செய்வதிலும் வேலை செய்வதிலும் மிகவும் பிஸியாக இருந்தோம், மேலும் நாம் பெற்ற வாழ்க்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்... இந்த கிறிஸ்மஸ் தினத்தில் உண்மையான நன்றியுடன் இருப்பதற்கு ஒரு நொடி எடுத்துக்கொள்வோம். கடினமான மற்றும் அழகான நாட்களில் எங்களை முன்னே அழைத்துச் சென்ற குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ❤️🎄 உங்களுக்கும்  மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் வாழ்த்துகள்" என ஸ்ருதிஹாசன் பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement