• Sep 20 2024

கௌதமி வெளியிட்ட வீடியோ... ஹார்ட்டின் பறக்கவிட்ட கமல்ஹாசன் மகள்... வைரல் பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக  80 காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை கௌதமி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். அத்தோடு பிரபல நடிகர்களான ராமராஜன், சத்யராஜ், விஜயகாந்த், டி ராஜேந்தர், கமல், ரஜினி எனப் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.


சினிமாவில் மட்டுமன்றி நிஜ வாழ்க்கையிலும் நடிகர் கமல்ஹாசனுடனுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றார் கௌதமி. மேலும் அவருடன் அபூர்வ சகோதரர்கள் தொடங்கி பாபநாசம் வரை பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.


ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திலும் கௌதமி நடித்து வருகிறார். 


இந்நிலையில் நடிகை கௌதமி கறுப்பு உடை அணிந்து மழையில் இறங்கி சென்னை வானிலையை ரசித்தவாறு வலம் வரும் அழகிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.  அப்பதிவில் "இதை விட சிறப்பானது என்ன இருக்க முடியும், அழகிய சென்னை" எனும் கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.


கௌதமியின் இந்த வீடியோவுக்கு கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசனும் ஹார்ட்டின் பறக்கவிட்டுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் - கௌதமி பிரிவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒரு காரணம் என சர்ச்சைகள் ஏற்கெனவே தொடர்ந்து  வந்த நிலையில் தற்போது ஸ்ருதி இந்த வீடியோவை லைக் செய்துள்ளதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

https://www.instagram.com/reel/CtnvVmHggRQ/?utm_source=ig_web_copy_link

Advertisement

Advertisement