• Sep 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் ஷு தமிழ் தான் - உண்மையைக் கூறிய அஞ்சலி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.அத்தோடு சீரியல் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் வேலை செய்யும் ஹோஸ்பிட்டல் தீவிரவாதிகளால்  ஹைஜெக் செய்துள்ளனர்.இதில் பாரதியின் குடும்பத்துடன் இன்னும் பல பேரும் பிடிபட்டுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் முன்னதாக பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி ரோலில் நடித்து வந்த கண்மணி மனோகரன், தான் ஏன் அந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது குறித்து அண்மையில் பேசிய விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

 அதாவது நான் பாரதி கண்ணம்மாவை விட்டு விலகியதே அமுதாவும் அன்னலட்சுமி சீரியலுக்காக தான். ஏனெனில் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு இதையும் தொடர முடியவில்லை. அதனால் தான் அந்த சீரியலில் இருந்து விலகினேன் எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








Advertisement

Advertisement