• Nov 14 2024

‘உங்களை பிரைவேட்டா மீட் பண்ணனும்’ என்று சொன்ன ரசிகையை கட்டியணைத்து பாசமழை பொழிந்த சித்தார்த்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் சித்தார்த். 2003 ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருடைய துள்ளலான நடிப்புடன் அழகான முகத்தோடு பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்தார்.இதனைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்தார்.

இது தவிர சமூக பிரச்சினைகளை கையில் எடுத்து இணையதள பக்கம் மூலமாக குரல் கொடுத்து வந்தார். எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாதவராக இருக்கும் இவர் மனதில் பேசுபவற்றை பேசி பல விமர்சனங்களுக்குள் உள்ளாகி வருவதும் உண்டு. நடிப்பைத் தவிர பல திரைப்படங்களில் பாடகராகவும் வலம் வந்திருக்கின்றார்.


இந்த  நிலையில் சமீபத்தில் டக்கர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.இப்படம் வருகிற 9 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கமல் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் டக்கர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் சித்தார்த். அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முழுவதும் பெண் ரசிகைகளை கொண்டு அந்த விழா கலை கட்டியது. அப்போது ஒரு பெண் ரசிகை சித்தார்த்திடம் ‘உங்களை பிரைவேட்டா மீட் பண்ணனும்’ என்று கேட்டார்.


அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘ஐய்யோ, இதுவே போதுங்க, இப்படி உங்களை சந்தித்ததிலேயே மிக்க மகிழ்ச்சியடைகிறேன், நீங்க கேட்டது பர்ஷனலா சரியிருக்காது, இருந்தாலும் நன்றி’ என்று சொல்லி அந்த பெண் ரசிகையை கட்டியணைத்து தன் அன்பை பரிமாறிக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement