• Sep 21 2024

சித்தார்த் – கியரா அத்வானிக்கு விரைவில் டும் டும்! மெஹந்தி விழாவுடன் ஆரம்பம்...உற்சாகத்தில் ரசிகர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு இருந்தே பரவி வருகிறது. ஆனால், சமீபத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோதரா தீயாக பரவி வரும் திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர்கள் இருவரும் என்னதான், எங்கள் இருவருக்கும் திருமணம் இல்லை என்று மறுத்து வந்தாலும், இப்பொது இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவது உறுதியாகியுள்ளது. 

அதன்படி, திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, இந்த ஜோடியைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கும் நிலையில், நேற்று இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஜெய்சால்மருக்கு செல்வதை கண்டதால் ரசிகர்களின் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய தயாராக இருக்கும் கியாரா அத்வானி, நேற்று மதியம் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருடன் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவும் இருந்தார், கியாரா மற்றும் மணீஷ் மல்ஹோத்ரா மதியம் ஜெய்சால்மர் விமான நிலையத்தில் காணப்பட்டனர்.

நடிகை கியாரா அத்வானி ஜெய்சால்மரை அடைந்த பிறகு, சித்தார்த் மல்ஹோத்ராவும் விமான நிலையத்திற்குப் புறப்பட்டதைக் காண முடிந்தது. அட ஆமாங்க… சித்தார்த் தனது வீட்டை விட்டு வெளியேறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கணவன்-மனைவி பந்தத்தில் இணைய காத்திருக்கும், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானியும் ராஜஸ்தான் ஜெய்சல்மரில் உள்ள கோட்டையில் பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளனர். இந்நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனராம்.

திருமணத்திற்கு முந்தைய விழாக்களான நேற்று அல்லது இன்று மெஹந்தி விழாவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பிப்ரவரி 6 அன்று இந்த ஜோடியின் திருமணம் ஜெய்சல்மரில் இருக்கும் ஒரு கோட்டையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா? என்று  காத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement