• Nov 19 2024

வெள்ளிவிழா நாயகன் மோகனின் பொற்காலம்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளி விழாப் படங்கள், 100 நாள்கள் படங்கள் என வெற்றிப் படங்களைத் தமிழ் சினிமா உலகில் தந்தவர் தான் நடிகர் மோகன். 1980 களின் சூப்பர் ஹீரோ வரிசையில் மோகன் முன்னணி ஹீரோவாக நின்றார். அவருக்குப் போட்டியாக அந்தக் காலத்தில் நின்ற கமலஹாசன், ரஜனிகாந்த், சிவகுமார் போன்றவர்கள் கூட மோகனின் வெற்றிப் பயணங்களை உள்ளூரப் பயந்து பார்த்த காலம் அது.

மோகன் தங்களது படத்தில் நடிக்க மாட்டாரா, அவர் நடித்தால் வசூல் மழை கொட்டும், நிறையப் பணம் பண்ணலாமெனத் தயாரிப்பாளர்கள் துடித்த காலம் அது.
கன்னட மாவட்டத்தின் உடுப்பி மாவட்டத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்த மோகனின் இயற்பெயர் மோகன்ராவ். கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் மோகன் நடித்திருந்தாலும் தமிழ் மொழிப் படங்களே அவரைப் புகழின் உச்சியில் கொண்டு போய் விட்டன.

1980 இல் பாலுமகேந்திரா தனது மூடுபனி படத்தின் மூலமாக மோகனைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தார்.அப் படத்தின் பிரமாண்டமான வெற்றி மோகனைத் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் என்ற நிலையைக் கொடுத்தது. பயணங்கள் முடிவதில்லை படம் அவரது பெயரைப் பட்டி தொட்டியெங்கும் பரவச் செய்தது. 1982 இல் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுக் கொடுத்தது. நெஞ்சத்தைக் கிள்ளாதே ஓராண்டு காலம் தியேட்டரில் ஓடிய படம்.

மேலும் இவர் விதி, ரெட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன், நூறாவது நாள் போன்ற வெற்றிப் படங்கள் மூலமாகப் புகழின் உச்சியை அடைந்தார். கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிக படங்களில் நடித்தார். 1986 இல் ரேவதியுடன் நடித்த மௌனராகம் இன்று வரையும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மோகனின் நடிப்பால் இப் படம் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது. இயக்குநர் மணிரத்தினத்திற்கும் உயரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.

இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் வெளிவந்த மோகனின் படங்கள் 1980 களின் படங்களில் இன்றளவும் பேசப்படுகின்றன. நடுத்தர வயதிலேயே மார்க்கெட் இழந்து ராசியில்லாத ராசாவாக மோகன் போனமை அவரது ரசிகர்களுக்கு பெரும் கவலை தான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement