• Nov 10 2024

சிம்புவும் நானும் பள்ளி படிக்கும் போதே காதலிக்கின்றோம்- வெந்து தணிந்தது காடு திரைப்பட நடிகை சொன்ன ஷாக்கிங் நியூஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் , ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நேற்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சித்தி இத்னானி நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் கதாநாயகி பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவரிடன் கற்பனை கதை ஏதாவது கூறுங்கள் என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறியதாவது 


என்னுடைய கற்பனை கதையில், நடிகர் சிலம்பரசனும், நானும் பள்ளிக் கூட காதலர்களாகவும், எனது அப்பாவாக நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் உதய நிதி ஸ்டாலின் சிம்புவின் அண்ணனாகவும் இருக்க வேண்டும். இறுதியில் உதயநிதி ஸ்டாலினும், நடிகர் ரஜினியும் இணைந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றார் ஜாலியாக. 


மேலும் ரஜினி படத்தில் நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தால், ஈ மாதிரி ரோல் கிடைச்சாலும் சந்தோஷமாக செய்வேன். ரஜினி எவ்வளவு பெரிய நடிகர். ஆனாலும் எப்பவும் ரொம்ப எளிமையான வேஷ்டி சட்டையில் வருவார் என்றும் இன்னும் பல விடயங்களை கூறியிருந்தார்.


Advertisement

Advertisement