திறமை வாய்ந்த நடிகர் என்று பெயர் எடுத்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வருவதில்லை, நடிகைகளுடன் காதல் முறிவு என பல சர்ச்சைகளில் சிக்கியவர் சிம்பு. அதேசமயம் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வரமாட்டார்; ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் ஒரே டேக்கில் எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் ஓகே செய்துவிடுவார் என்ற பெயரையும் பெற்றிருப்பவர்.
ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்தப் படங்களில் அவரது நடிப்பை தாண்டி அவரது விரல் அசைவுகள் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக விரல் வித்தை காட்டும் நடிகர் என்று பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு தனது கைகளை அவர் பயன்படுத்தினார். இப்படி கமர்ஷியல் படங்களிலேயே சென்றுகொண்டிருந்த சிம்புவை பக்குவ நடிகராக ரசிகர்களுக்கு காட்டிய படம் கோவில் .
காதல், குடும்ப செண்ட்டிமெண்ட், ஆக்ஷன் என பட்டையை கிளப்பும் ஹரி இயக்கிய படம் கோவில். சிம்புவை மட்டுமின்றி ஹரியையும் ஒரு சிறந்த இயக்குநராக அந்தப் படம் அடையாளப்படுத்தியது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் மெகா ஹிட்டாகி சிம்புவின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது . சோனியா அகர்வால், நாசர், ராஜ்கிரண், வடிவேலு, ரேகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கோவில் படத்தில் சிம்புவை ஹரி கமிட் செய்தபோது சிம்பு மீது ஏகப்பட்ட புகார் பத்திரங்கள் மற்றவர்களால் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இருப்பினும் சிம்புவின் திறமை மீது மரியாதை வைத்து கமிட் செய்திருக்கிறார் ஹரி. குறிப்பாக, சிம்புவிடம் கதையை சொல்லும்போதே, சீனையோ, வசனத்தையோ மாற்ற சொல்லக்கூடாது. முக்கியமாக நான் திட்டம் போட்டு படத்தை இயக்குபவன். எனவே ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வர வேண்டும் எனவும் ஹரி கண்டிஷன் போட்டதாக ஒரு தகவல் அந்த சமயத்தில் உலாவியது.
இந்தச் சூழலில் கோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை இயக்குநர் ஹரி கண்டபடி திட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது, ஷூட்டிங் ஆரம்பித்த கொஞ்ச் நாள்களிலேயே சிம்பு ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு வராமல் லேட்டாக வந்திருக்கிறார். ஒரு நாளோடு நின்றுவிடும் என்று நினைத்த ஹரிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தொடர்ந்து மூன்று நாள்கள் தாமதமாக வந்திருக்கிறார் சிம்பு.
அப்படி ஒருமுறை 9 மணிக்கு ஷூட்டிங் வர வேண்டிய சிம்பு காலை 11.15 மணிக்கு வந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஹரி, எங்கடா அந்த மடப்பய என தனது உதவி இயக்குநரை அழைத்து, "இன்னைக்கு எத்தனை மணிக்கு ஷூட்டிங் 9 மணிக்குதானே. நீ 11 மணிக்கு வர. சம்பளம் கொடுக்குறேனா இல்லையா. காசு வாங்குறல உன் வேலையை நீதானே செய்யணும். தொலைச்சுப்புடுவேன்" என கூறியிருக்கிறார்.
அந்த உதவி இயக்குநரை திட்டி முடித்துவிட்டு சிம்புவை பார்த்து, 'என்ன சிம்பு ஷாட்டுக்கு ரெடியா' என கேட்டாராம். சிம்புவும் ஓகே சார் என்று சொல்லி ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் அந்த திட்டு உதவி இயக்குநருக்கு விழவில்லை தனக்குத்தான் விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டாராம் சிம்பு.
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாராம் சிம்பு. அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நடிகை சோனியா அகர்வாலுடன் மது குடித்து சிகரெட் பிடித்து ஆட்டம் போட்டாராம் சிம்பு. இருப்பினும் அடுத்த நாள் காலை சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். அப்போது சிம்புவை பார்த்த ஹரி, என்ன சிம்பு நைட் முழுக்க ஜாலியா என சிரித்துக்கொண்டே கேட்டாராம். அதற்கு சிம்புவோ அதெல்லாம் இல்லை சார் என சொல்லியிருக்கிறார். ம்ம் பார்த்தேன் பார்த்தேன் என சிரித்தபடி சென்றுவிட்டாராம். அவரைப் பொறுத்தவரை ஷூட்டிங்கிற்கு நேரத்துக்கு வந்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதுதான் பாலிசியாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Listen News!