சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பாலிவுட் முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் இருவருக்குமே சிம்புவை விட டபுள் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’எஸ்டிஆர் 48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு தற்போது ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ’எஸ்டிஆர் 48’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகள் நடிக்க இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் கைரா அத்வானி என்றும் இன்னொருவர் ஜான்வி கபூர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜான்வி கபூர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கைரா அத்வானி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.
இந்த படத்தில் மேலும் சில பான் இந்திய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நட்சத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது அது அனைவரையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!