விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை டப்பிங் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என்ற கேப்ஷனில் வெளியான தி க்ரே மேன் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ
- சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்
- விஜய்டிவி பிரஜனின் ‘டி 3’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
- கணவனுடன் தொடர்பில் இருந்த நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்- தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீஸார்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!