• Nov 19 2024

கல்யாணத்திற்கு ரெட்கார்ட் காட்டிய சிம்பு! வரன் தேடும் பெற்றோர்! விரைவில் டும் டும்!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் ஹாசனுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்து நடிகராக மாறியவர்களில் சிம்பு மிகவும் முக்கியமானவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஈடுபாடு கொண்ட சிம்புவுக்கு சினிமாவில் தெரியாத விடயங்களே இல்லை.


சிம்புவினை பற்றி சில குற்றச்சாட்டுக்கள் இருந்தது உண்மைதான், ஆனால் மாநாடு படத்திற்கு பின்னர் சிம்பு நன்றாகவே மாறிவிட்டார். அவரிடம் இருக்கும் கெட்டபழக்கத்தை எல்லாம் விட்டுவிட்டார். 40 வயதான சிம்பு  படங்களில் இணைந்த கதாநாயகிகளுடன் டேட்டிங் என ஆட்டம் போட்டு விட்டார். இதனால் இவரை பற்றிய கிசு கிசுப்புக்கள் அதிகமாகவே வெளிவந்தது.


சிம்புவிடம் திருமணத்தை பற்றி கேட்டால் அமைதியாக இருக்கிறாராம். இல்லை வேண்டாம் என்றே சொல்லி விடுகிறாராம்.யாரையும் தற்போது லவ் பண்ணவில்லையாம், சினிமாவில் பெரிய ஸ்ட்டாராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு ஆன்மீகவாதி போலவே இருக்கிறாராம்.

கல்யாணத்திற்கும் ரெட்காட் காட்டிவிட்டார் சிம்பு.  ஆனால் அதை ஏற்க்க மறுத்த அம்மா அப்பா இருவரும் நல்ல ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று வரன் பார்த்து வருகிறார்கள். சீக்கிரம் சிம்புவின் கல்யாண செய்தியும் பெற்றோர் சார்பில் இருந்து வரப்போகின்றது என ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்க்கப்படுகின்றது.  

Advertisement

Advertisement