• Sep 20 2024

திடீரென லண்டனுக்கு விசிட்டடித்த சிம்பு- என்ன காரணம் தெரியுமா?- செம மாஸான கெட்டப்பில் இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியாகிய பத்து தல திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில்  ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் தனது 48வது படத்தில் நடித்து வருகின்றார்.

இன்னும் STR 48 ஷூட்டிங் தொடங்காத நிலையில், சிம்பு லண்டன் சென்றுவிட்டார். இதுவும் STR 48 படத்திற்காக தான் அவர் லண்டனுக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அதனால், சிம்பு லண்டனில் இருந்து திரும்பிய பின்னர் தான் STR 48 ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லண்டனில் இருக்கும் சிம்பு அங்கு கெத்தாக ஊர் சுற்றி வரும் புகைப்படங்கள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. 


இந்த போட்டோக்களில் செம்ம ஸ்டைலிஷான காஸ்ட்யூம், மாஸ் லுக் என தாறுமாறாக இருக்கிறார் சிம்பு. இந்த கெட்டப்பில் சிம்புவை பார்க்க ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். இதுதான் STR 48 படத்தில் சிம்புவின் கெட்டப்பாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், STR 48 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் எனவும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.


இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் கமலுடன் சிம்புவும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. ராஜ்கமல் பிலிம்ஸின் டுவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அப்போது STR 48 அப்டேட் வரலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதனால், இப்போது வெளியாகியுள்ள சிம்புவின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement