• Nov 17 2024

சிம்பு பட நடிகை கல்யாணி வீட்டில் விஷேசம்... கோலாகலமாக இடம்பெற்ற திருமண நிகழ்வு.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பிரியதர்ஷன். இவர் தமிழிலும் குறிப்பிடத்தக்களவிற்கு ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்தவகையில் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'நிமிர்' படத்தையும், நவரசா ஆந்தாலஜி சீரிஸில் இடம்பெற்ற ஒரு பகுதியையும் இவர் இயக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


பிரியதர்ஷனின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் 1990-ஆம் ஆண்டு நடிகை லிஸ்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறந்த நாள் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இவர்களுக்கு சித்தார்த் மற்றும் கல்யாணி என இரு பிள்ளைகள் உள்ளனர். 


இதில் கல்யாணி பிரியதர்ஷன் பிரபல நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்ற இவர் தமிழில் 'ஹீரோ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 


அதனைத் தொடர்ந்து பின்பு சிம்பு நடிப்பில் வெளிவந்த 'மாநாடு' என்ற படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இந்நிலையில், பிரியதர்ஷனின் மகன் சித்தார்த்துக்கு தற்போது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement