காமெடி நடிகர் என்பதைத் தாண்டி சிம்புவின் தீவிர ரசிகனாக மாறி இருப்பவர் கூல் சுரேஷ். 'வெந்து தணிந்தது காடு' படம் சிம்புவுக்கு கை கொடுத்ததோ இல்லையோ இவருக்கு மொத்தமாக வாழ்க்கையே கொடுத்துள்ளது. அதாவது "வெந்து தணிந்தது காடு தலைவன் எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு" என இவர் கூறிய வசனம் தியேட்டர் வாசல் மட்டுமில்லாமல் ஒவ்வொரு சிம்பு ரசிகர்களின் வீட்டு வாசலிலும் அந்த நேரத்தில் ஓங்கி ஒலித்தது.
இப்படத்தின் மூலம் கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து புதிதாக வருகின்ற ஒவ்வொரு படங்களினதும் முதல்நாள் முதல் காட்சியை பார்த்து விமர்சனம் சொல்ல ஆரம்பித்துவிட்டார் கூல் சுரேஷ். ரசிகர்கள் படம் பார்க்கவில்லை என்றாலும், கூல் சுரேஷ் செய்யும் அலப்பறைகளை கண்டு ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சிம்புவின் 'பத்து தல' படத்திற்கான புரமோஷன் வேலைகள் தீவிரமாக இறங்கியுள்ளார் கூல் சுரேஷ். அந்த வகையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் உடைய டீசர் வெளியீட்டு விழாவில் இவர் பேசிய பேச்சுக்கள் அனைத்துமே "என்னன்னா சொல்றான் பாருங்க" என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் பயங்கர டிரெண்டாகி வருகிறது.
அதாவது "பத்து தல படத்தின் FDFS காட்சிக்கு ஹெலிகாப்டர்ல வருவேன்" எனக் கூறியுள்ளார் கூல் சுரேஷ். அதுமட்டுமல்லாது "இதனால தயாரிப்பாளர் பயப்பட வேண்டாம். நான் உங்க பட்ஜெட்ல கடைசி வரைக்கும் கை வைக்க மாட்டேன். என் சொந்த வீடு, பக்கத்து வீடு எல்லாத்தையும் வித்தாவது என் தலைவன் எஸ்டிஆர் படத்துக்கு ஹெலிகாப்டர்ல வந்து மலர் தூவ போறேன். அதுக்கான வேலை நடந்துட்டு இருக்கு" என பேசி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தது மட்டுமல்லாது மாஸ் காட்டியும் இருக்கின்றார் கூல் சுரேஷ்.
மேலும் "சிம்பு தான் என் பேச்சு. என் மூச்சு. என் வாட்ச்சு. எப்படி வாட்ச்சு சுத்திட்டே இருக்கோ, அது போல நானும் சிம்புவை சுத்திட்டே இருப்பேன்" எனவும் கூறி அரங்கில் உள்ள அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளார் கூல் சுரேஷ். எது எவ்வாறாயினும் "வீட்டை வித்தாவது சிம்புவின் படத்திற்கு ஹெலிஹாப்டரில் வருவேன்" என்று கூறியுள்ளமை பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
Listen News!