• Sep 20 2024

அவதார் 2 படத்தை பார்த்துவிட்டு சிம்பு கூறிய விமர்சனம்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த படம் தான் அவதார். எபிக் சையின்ஸ் ஃபிக்சன் படமான இதை ஜேம்ஸ் கேமரூனே எழுதி, இயக்கி, தயாரித்து, எடிட்டிங்கும் செய்திருந்தார். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 14,000 க்கும் அதிகமான தியட்டர்களில் 3டி வெர்சனில் வெளியிடப்பட்டது.

237 கோடி மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் அவதார். ரீலீசிற்காக 9 மில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் அதுவே பிரம்மாண்டத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது.

மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2.847 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது.இந்த படம் 2010 ம் ஆண்டு ஆஸ்கர் விழாவில் அதிகபட்சம் 9 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த ப்ரொடக்சன் டிசைன் ஆகிய 3 ஆஸ்கார் விருதுகளை பெற்றது.

அவதார் படத்தின் இரண்டாம் பாகமாக அவதார் 2 படத்தை இயக்கி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன். மேலும் இந்த படத்தை 20th Century Studios தயாரித்துள்ளது. 2014 ம் ஆண்டே அவதார் 2 படத்தை எடுக்க திட்டமிட்டார் ஜேம்ஸ் கேரூன். ஆனால் 2017 ல் தான் இந்த படத்தை துவக்கினார். எனினும் அவதார் 2 படத்துடன் சேர்ந்து அவதார் 3 படத்தையும் இயக்கி உள்ளார். 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.அதன் பிறகு மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.

இந்தியாவில் அதிக வசூலை அள்ளிய அவதார், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் "அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்" திரைப்படம் டிசம்பர் 16ல் அதாவது நாளை வெளியாக உள்ளது.நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை பிரிமீயர் காட்சியில் பார்த்த பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய ஒரு வார்த்தை விமர்சனத்தை சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.மேலும் இதுவரை படம் பார்த்த அனைவரும் படம் சூப்பர் என்று தான் கூறி வந்துள்ளனர். இவ்வாறுஇருக்கையில்  நடிகர் சிலம்பரசன் நேற்று அவதார் 2 படத்தை தாய்லாந்தில் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு 'க்ளாப்' எமோஜியை பதிவிட்டு படம் அருமையாக உள்ளது என்பதை கூறியுள்ளார்.

இதோ அந்த பதிவு..



Advertisement

Advertisement