இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமானவர் சிந்து. இவர் அங்காடித் தெருவை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் இன்றைய தினம் யாருமே எதிர்பாராத நேரத்தில் அதிகாலை 2.15 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவரின் இந்த உயிரிழப்பானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதனையடுத்து 10 நாள்ல செத்துருவனு உறவினர் ஒருவர் தனக்கு சாபம் விட்டதாக சிந்து இறுதியாக அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. அந்தவகையில் அவர் அதில் கூறுகையில் "என்னை எடுத்துக்கோ, இல்லை இந்த உலகில் நிம்மதியாக வாழவிடு என்று தான் கடவுளிடம் தினமும் கேட்கிறேன். தினம் தினம் தாங்க முடியாத அளவிற்கு சித்ரவதையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார்.
மேலும் "நான் கஷ்டப்படுவது மட்டுமின்றி என் கூட இருப்பவர்களையும் சரியாக கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். கேன்சருக்கு மருந்தே கிடையாது. கொரோனா காலகட்டத்தில் வந்த இந்த கட்டிகள் பின்னர் பரவ ஆரம்பித்தன.இதனால் மேலும் பரவாமல் இருக்கு ஒருபக்க மார்பை எடுத்து விட்டனர்" என்றார்.
அத்தோடு "சினிமாவில் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் பிறருக்கு உதவி செஞ்சிட்டேன். என்னிடம் இப்போ பணம் இல்லை, யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை. பணம் கடனாக வாங்கிவிட்டு கொடுக்க சற்றுத் தாமதமாகும் போது என்னை அசிங்கப்படுத்துகிறார்கள்" எனவும் கூறியுள்ளார்.
மேலும் "ஒரு மாசத்துக்கு முன்னர் கூட என்னுடைய அக்கா மகள் என்னிடம் வந்து, இப்போ கேன்சர் தான் உனக்கு வந்திருக்கு, இன்னும் அடுத்தடுத்து நிறைய நோய்கள் தொடர்ந்து வரும், பத்து நாள்ல நீ செத்துடுவனு சாபம் விட்டா" எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சிந்து.
அதுமட்டுமல்லாது இப்படி ஒரு நிலைமையில் உயிர் வாழ்வதைவிட சாவது நல்லது போல் தோணுவதாகவும், இன்னொரு மார்பிலும் புற்று நோய் பரவி விட்டதாகவும், அதனை அகற்ற சிகிச்சைக்கான பணம் அவரிடம் இல்லை எனவும் சிந்து அப்பேட்டியில் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
Listen News!