இந்திய சினிமாவில் மிக பிரபல பின்னணி பாடகராக வலம்வருபவர் நம்ம கே கே. கேரளாவை பூர்விகமாக கொண்ட கே கே சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.இந்நிலையில் பாடகர் கே கே (மே 31) நேற்று காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஹிந்தி, மராத்தி,குஜராத்தி, மலையாளம் என பல மொழிகளிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இவருடைய அகால மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொல்கத்தாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நோய் வாய்ப்பட்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் தனது ஹோட்டலுக்குச் சென்ற கே கேவுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி, யூனியன் மினிஸ்டர் என பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரது மறைவுக்கான இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடகர் கே கே -இன்உடலுக்கு மேற்கு வங்க விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையை செய்யப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பழைய காலத்து உடையில் விஜய் சேதுபதி-விக்ரம் படத்திலிருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- விஜய் டிவி-யின் ஒரு நிகழ்ச்சியையும் விட்டு வைக்காத கமல்-விக்ரம் படத்திற்கு வேற லெவலில் ப்ரமோஷன்
- வருங்கால மனைவியின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடிய நவீன்-குவியும் வாழ்த்துக்கள்
- உலகம் முழுவதும் டான் திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?-செம குஷியில் படக்குழு
- KGF திரைப்பட யாஷ் சீரியல்களிலும் நடித்தவரா?- இதுவரை எத்தனை தொடர்களில் நடித்திருக்கின்றாரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!