விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் ரோகிணியின் செட்டப் மலேசியா மாமாவாக நடிக்கும் ஜெயமணி என்பவர் 40 சீரியல் டைரக்ட் செய்து இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
’திருமதி செல்வம்’ என்ற தொடரில் பூங்காவனம் என்ற கேரக்டரில் ஜெயமணி நடித்த நிலையில் அந்த பெயரே அவருக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டது. யாரை கேட்டாலும் அவரை பூங்காவனம் என்று தான் அழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அவர் ரோகினியின் செட்டப் மாமாவாக நடித்த நிலையில் தற்போது தன்னை எல்லோரும் மலேசிய மாமா என்று தான் கூப்பிடுகிறார்கள் என்றும் நான் நினைத்த மாதிரியே என்னுடைய பெயர் மாறிவிட்டது என்றும் அவர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மேலும் தான் 40 சீரியல் டைரக்ட் பண்ணி இருப்பதாகவும் கிரியேட்டிவ் வொர்க் எல்லாம் செய்திருக்கிறேன் என்றும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இயக்குனர் என்ன எதிர்பார்த்தாரோ, அதை ஒரே சாட்டில் கொடுத்து விடுவேன் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மேலும் தனது மாமா ஒரு பாடகர் என்றும் அவர் பாடுவதை கேட்டு கேட்டு தான் தனக்கு நடிக்கும் ஆசை வந்தது என்றும் பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எம்ஜிஆர் சிவாஜி ஆக என்னையே நான் நினைத்துக் கொள்வேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்றும் ஆனாலும் அப்போது நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த தனக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது என்றும் சில சினிமாவிலும் நடித்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து வரும் ’சொர்க்கவாசல்’ என்ற படத்தில் ஒரு நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்றும் இந்த படம் வெளி வந்தால் எனக்கு இன்னும் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயமணியின் மனைவி மாலதி டப்பிங் ஆஸ்ட் என்பதும் இந்த தம்பதியின் மகள் டீச்சர் ஆக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது மகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் என்ற தகவலையும் அவர் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!