• Sep 20 2024

பணத்தைத் திருடிய சத்யா... பறிகொடுத்த விஜயாவை கூண்டில் அடைத்த பைனான்ஸ் கம்பெனி... விறுவிறுப்பான 'Siragadikka Aasai' ப்ரோமோ வீடியோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியல்களில் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக சுவாரஸியமாக ஓடிக்கொண்டிருக்குக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.


அதில் விஜயா வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு பைனான்ஸ்ல இருந்து 2 பேர் வந்து " எங்க கிட்ட பைனான்ஸ் வாங்கி இருக்கீங்க வட்டி கட்ட இல்லனா வேறமாதிரி பிரச்சினை ஆகிடும் பாத்துக்கோங்க" என்று சொல்லுறாங்க . விஜயா அதிர்ச்சியோடு "நீங்க போங்க பின்னாடியே வாரன்" என்று சொல்லிவிட்டு அலுமாரியை திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளிய போறாங்க. 


அப்போது மீனாவின் தம்பி சத்யாவிடம் அவரின் நண்பன் "நீ பணத்தை திருடாமலே உன் மேல பழி போட்டாங்க அதுக்கு பதில் கேட்க வேணாமா? "என்று சொல்ல, சத்யாவும் அவரின் நண்பரும் முகத்தை மறைத்து கொண்டு  பைக்கில் ஏறி விஜயாவை பின்தொடர்ந்து சென்று அவரின் பணப்பையை பிடுங்கி இழுத்து எடுத்துக்கொண்டு போய்விடவே, விஜயா "என் பணம் என் பணம்" என்று கத்திக்கொண்டு பின்னாலே ஓடுகிறாள். 

பின்பு பணத்தை எடுத்துக்கொண்டு பையை மட்டும் தூக்கி  வீசிவிட்டு சத்யாவும் அவரின் நண்பரும் வேகமாக சென்றுவிடுகின்றனர். பணம் இல்லாமல் பையை மட்டும் எடுத்துக்கொண்டு பைனான்ஸ் கம்பெனிக்கு சென்று மேனேஜரை பார்க்க போறாங்க விஜயா.


மொத்த பணத்தையும் வை என்று  மேனேஜர் சொல்ல "மொத்தப்பணமும் திருடுபோயிட்டு " என்று விஜயா பயந்துகொண்டே சொல்ல, கோபமான மேனேஜர் விஜயாவை கூட்டில் அடைக்குமாறு சொல்லுகிறார், பின்பு விஜயாவை பிறகு இழுத்துகொண்டுபோய் கூட்டில் அடைக்குறாங்க." தயவு செஞ்சி என வெளிய விட்டுறாங்கனு கத்துறாங்க விஜயா. 

மறுபுறம் விஜயாவை தேடி மீனா பைனான்ஸ் கம்பெனிக்கு வருவதுபோல இன்றைக்கான  ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது. விஜயா வீட்டை அடமானம் வைத்தது அம்பலமாகிவிடுமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .


Advertisement

Advertisement