• Nov 14 2024

அழகில் சினேகாவையே மிஞ்சிய அக்கா சங்கீதா... சேலையில இப்படி ஜொலிக்கிறாங்களே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரசன்னா. இவர் மணிரத்னம் தயாரிப்பில் 2002 இல் வெளிவந்த 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலமாகவே முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 'கஸ்தூரி மான், அழகிய தீயே, சீனா தானா, கண்ட நாள்முதல்' எனப் பல படங்களிலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.


இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்து வந்த நடிகை சினேகாவை 2012 இல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பின்பு 2015 ஆம் ஆண்டு இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2020 இல் இரண்டாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. 


பிரசவத்திற்கு பின் சினேகா சில காலம் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். அதன் பின் உடல் எடையை தற்போது குறைந்திருக்கும் அவர் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அவற்றில் நடுவராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார்.


இவ்வாறாக சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கால் பதித்திருக்கின்ற சினேகா சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இவரைப் போலவே இவரது அக்கா சங்கீதாவும் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவார். 


அந்தவகையில் சமீபத்திலும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "தங்கை சினேகாவையே அழகில் மிஞ்சிடுவீங்க போல" என தமது கமெண்டுகளின் மூலமாக ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement