• Sep 20 2024

பட்டையை கிழப்பி வரும் சீதா ராமம்- எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சீதா ராமம். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைக்கு இடையே ராம் சீதாவின் காதல் ராம் செய்த தியாகம், இவர்களைத் தேடி அலையும் ராஷ்மிகா என்று ஒட்டுமொத்த காதல் காவியமாக வெளிவந்து இருக்கிறது இந்தத் திரைப்படம்.

20 வருடத்திற்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு அட்ரஸ் தெரியாத சீதா ராமை தேடி அலைகிறார் ராஷ்மிகா. 20 வருடங்களுக்கு பின்பு அந்த கடிதத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்ற சீக்ரெட்டை இயக்குநர் கச்சிதமாக படம் ஆக்கி இருக்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் சுமார் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் ரூ 60 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கிறது.

Advertisement

Advertisement