• Nov 17 2024

முடி, தாடி ஆகியவற்றை மாற்ற வேண்டிய சூழல்- விஜய்யின் மாஸ்டர் படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் குருதி ஆட்டம். இப்படத்தை போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிப்பதோடு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இப்படம் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிப்பதோடு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வில்லனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதில் வில்லனாக எங்கேயும் எப்போதும் மற்றும் வத்திக்குச்சி படங்களில் நடித்த வத்சன் நடித்திருந்தார்.

இப்படத்தில் பணிபுரிந்தது குறித்து வத்சன் பேசும்போது, “இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளியுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் அளித்துள்ளது.

இங்கே ஒரு சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், நான் அவருடைய ‘கணிதன்’ படத்தின் ப்ரீ புரொடக்ஷனில் பணிபுரிந்தேன். அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் பழகினோம். பின்னர் அவருடனான தொடர்பை இழந்தேன். அடுத்த முறை அவர் என்னைப் பார்த்தது முதல் நாள் படப்பிடிப்பின் போது.

நான் 35 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். அதில் 25 நாட்கள் அதர்வாவுடன் நடித்த காட்சிகள். எனது படப்பிடிப்பின் முதல் நாளே பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய கேன்வாஸ் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார். அதில் நான் எனது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.

இந்த படத்தில் நடித்து வந்த சமயத்தில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்காக எனது முடி, தாடி ஆகியவற்றை மாற்ற வேண்டிய சூழல். நான் என் நிலைமையைச் சொன்னேன். இயக்குநர் லோகேஷ் என்னைப் புரிந்துகொண்டு பாராட்டினார். முதலில் படத்தை முடிக்கச் சொன்னார், தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடிக்க முடியாமல் போனதில் ஒரு சின்ன வருத்தம் எப்போதும் இருக்கிறது.

இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். இந்த திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் விரைவில் வெளியிடப்படும்” என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement