• Sep 21 2024

சிவாஜி-2 திரைப்படம் உருவாகவுள்ளதா?- பிரபல தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநரான ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் சிவாஜி. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இப்படத்தை ஏ.விம் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளது. அந்த நிறுவனம் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரியஸை தயாரித்துள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தத் தொடர் 19ஆம் தேதி Sony Liv ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றிற்கு ,ந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன் பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவரிடம் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு மற்றும் சிவாஜி-2 உருவாக வாய்ப்புள்ளதா என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அருணா குகன், சிவாஜி-2 திரைப்படத்திற்கு முதலில் கதை அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் நடக்கலாம் என தெரிவித்தார்.

அதே போல் பெரிய நடிகர்களின் படங்கள் தயாரிக்க ஏ.வி.எம் நிறுவனம் தயாராக உள்ளதா என்ற கேள்விக்கு, நாங்கள் எதற்கும் ஓப்பனாக இருக்கிறோம். சில கணக்கிடுகள் உள்ளன, நாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளியில் தெரியவில்லை. ஏ.வி.எம் நிறுவனம் எதற்கும் தயாராக உள்ளது என தெரிவித்தார். இதன் மூலம் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் மீண்டும் கோலிவுட்டில் களமிறங்க தயாராகிவுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement