தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பழம் பெரும் நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராக திகழும் இவர் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்த நட்சத்திரமாகவும் விளங்கியவர்.
1952ம் ஆண்டு வெளியான பராசக்தி என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 288 படங்களிலும், தமிழில் மட்டும் 250க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இதுவரை இளம் நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் சிவாஜி, நிஜ வாழ்க்கையிலும் ராஜா என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் வாழ்ந்திருக்கின்றார்.அத்தோடு சினிமாவில் நுழைந்த ஆண்டிலிருந்து 40 வருடங்களுக்கு மேலாக பல நன்கொடைகளையும் செய்திருக்கின்றார்.
இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றில் கலந்து கொண்ட இன்டர்வியூ ஒன்று தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் தான் இந்தியன் என்பதைப் பெருமை கொள்கிறேன் என ஆங்கிலத்தால் பேசி இருக்கின்றார்.3ம் வகுப்பு மட்டும் படித்த சிவாஜி கணேசன் சரளமாக ஆங்கிலம் பேசுவது ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Am proud to be Indian..that's why Kennedy called me..Indian actor..No other country actor was invited.. Am proud am Indian...இப்படி ஒரு வெளிப்படுத்தல். 3 வது வரை மட்டுமே படித்திருந்தாலும், தன்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற அந்த Confidence. WoW... pic.twitter.com/0oR0rv3uqj
Listen News!