• Nov 19 2024

மோசடி வழக்கில் சிக்கியுள்ள சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரன்... சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். மண்ணுலகை விட்டு மறைந்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் இளைய மகன் தான் பிரபு. தந்தையைப் போலவே இவரும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 


அதேபோல் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக நடித்திருந்தமையை யாராலும் இன்றும் மறக்க முடியாது. ராம்குமார் மீது தான் தற்போது செக் மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 


அந்தவகையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரரான அக்‌ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவாஜியின் மகன் ராம்குமார் மீதும், அவரது மகன் துஷ்யந்த் மீதும் செக் மோசடி வழக்கு ஒன்றினைத் தொடர்ந்துள்ளார்.

இவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் "ராம்குமாரின் மகன் துஷ்யந்தின் மனைவிக்கு தொடர்புள்ள ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு ஒன்றினை மேற்கொண்டோம். அப்போது கடந்த 2019-ஆம் ஆண்டு துஷ்யந்த் சார்பில் இருந்து ரூ.15 லட்சத்துக்கான இரண்டு காசோலைகள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து நாங்கள் வங்கியில் அந்த காசோலையை செலுத்தியபோது அது பணம் இல்லாததால் திரும்பி வந்துவிட்டது. தங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தெரிந்தும் எங்களுக்கு காசோலை அளித்தது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை அளிக்கவில்லை. 


அதுமட்டுமல்லாமல் பணத்தையும் இன்னமும் திருப்பி தரவில்லை. எனவே ராம்குமாரின் மகனான துஷ்யந்த் மீதும் அவரது மனைவி அபிராமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மகன் தரவேண்டிய பணத்துக்கு அவரது தந்தை பொறுப்பேற்காததால் ராம்குமார் மீதும் சட்ட நடவடிக்க எடுக்க வேண்டும்" எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement