சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது.இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸாவதில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாம்
சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஆரம்பத்தில், அவருக்கு சில படங்கள் வெற்றிப் பெற்றன. ஆனால், அதன் பின்னர் வெளியான படங்களில் நஷ்டம் அடைந்தார் சிவகார்த்திகேயன். அதுமட்டும் இல்லாமல் சீமராஜா, வேலைக்காரன் திரைப்படங்களும் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கவில்லை. அதேபோல் அயலான் திரைப்படமும் சுமார் 4 ஆண்டுகளாக முடங்கி விட்டது. இதனால் அவர் அதிக கடன் பிரச்சினையில் சிக்கியதாக சொல்லப்பட்டது.
கடன் தொல்லையில் சிக்கித் திணறிய சிவகார்த்திகேயன், ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் குறிப்பிட்ட ஒரு தொகையை பைனான்சியர்களுக்கு திருப்பி கொடுத்து வந்தாராம். கடந்தாண்டு வெளியான 'டாக்டர்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட சிவகார்த்திகேயன், ஓரளவு கடனில் இருந்து மீளத் தொடங்கினார். ஆனால், இந்தாண்டு ரிலீஸான டான், பிரின்ஸ் இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேநேரம் இந்தப் படங்கள் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பும் இல்லை என்பதால், நிலைமை இன்னும் மோசமாகியுள்ளதாம்.
இதனால் மாவீரன் படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சீக்கிரம் திருப்பி தர வேண்டும் என, சிவகார்த்திகேயனுக்கு பைனான்சியர்கள் அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மாவீரன் திரைப்படம் சொன்னபடி வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!