தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் கடந்த 2019 இல் வெளியான 'கேங் லீடர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
அறிமுகப் படத்திலேயே பிரியங்கா மோகனின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் நெல்சன், தன்னுடைய இரண்டாவது படமான 'டாக்டர்' என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார். இப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் வாயிலாக கோலிவுட் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா.
மேலும் இப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல், வசூலிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரியளவில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இவ்வாறாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதன் காரணமாக அடுத்த தடவையாகவும் 'டான்' படத்துக்காக சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் பிரியங்கா.டான் படமும் முதலுக்கு மோசமின்றி வசூலில் பட்டையை கிளப்பி ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் ஜெயம்ரவியின் 30 ஆவது படத்திலும் அவருக்கு ஜோடியாக பிரியங்காவே நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது நெல்சன் இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பிலும் தற்போது தயாராகி வரும் 'ஜெயிலர்' என்ற படத்தில் பிரியங்காவும் முக்கிய ரோலில் நடிப்பதாக ஏற்கெனவே பேச்சுக்கள் அடிபட்டன.
எனினும் கடைசி நேரத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதன் காரணமாக தற்போது அவருக்கு பதில் அந்த ரோலில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் பிரியங்கா மோகன் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கான முக்கிய காரணமே இயக்குநர் நெல்சன் தான் எனக் கூறப்படுகின்றது.
அதாவது 'டாக்டர்' படத்தில் நடித்தபோதே இயக்குநர் நெல்சனையும் தன்னையும் இணைத்து பல கிசுகிசுக்கள் எழுந்ததாக பிரியங்கா கூறியிருக்கின்றார்.
மேலும் நல்ல நண்பர்களாக பழகி வரும் தங்களைப் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுவதை விரும்பாமையினாலேயே 'ஜெயிலர்' படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் மறுப்பு தெரிவித்து இருப்பதாக சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Listen News!