• Sep 20 2024

500 கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்ட சிவகார்திகேயன்; மாவீரன் திடைப்பட தர லோக்கல் சாங் வெளியாகியது!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளில் அதாவது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது, க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் தர லோக்கலில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார். படத்தின் முதல் பாடலான, ‘SceneAh SceneAh’ க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது .

இதிலிருந்து இந்த பாடல் செம்ம குத்து பாடலாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.  ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் இந்த பாடல் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் 500 கலைஞர்களுடன் நடனமாடியுள்ளார், இந்த பாடலை படமாக்க தயாரிப்பாளர்கள் மோகோபோட் என்ற ராட்சத கேமராவைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement