• Nov 14 2024

மாணவ-மாணவியர் முன் கொரிய மக்களை உருவக்கேலி செய்து சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.மெரினா படத்தின் மூலம் கதாநாயகியாக இவர் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் இளம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவரது நடிப்பில் தற்போது பிரின்ஸ்  என்னும் படம் உருவாகி வருகின்றது.அத்தோடு சிவகார்த்திகேயன் நகைச்சுவை மற்றும் மிமிக்கிரி செய்வதிலும் சிறந்தவர்.டான் படத்தில் ஒரு காட்சியில் சூரியும், சிவகார்த்திகேயனும் கொரிய மொழிபோல் தமிழ் பேசுவார்கள். பெரிதாக இந்து ரசிக்கப்பட்டது.


இந்நிலையில் சமீபத்தில் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துக்கொண்ட சிவகார்த்திகேயன் மாணவ-மாணவியரிடையே பேசும்போது டான் பட காமெடியை பேசிக்காட்டினார். மாணவ-மாணவியர் ஓ என கூச்சலிட்டதும் உற்சாகமான சிவகார்த்திகேயன் தான் என்ன பேசுகிறோம் என்பதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கொரிய நடிகர்-நடிகைகளை பற்றி பேச ஆரம்பித்தார். 


"நான் எப்ப கொரியன் படம் பார்த்தாலும் அதில் நடிக்கும் எல்லோரும் ஒரே மாதிரித்தான் தெரிவாங்க, சில நேரம் எது ஹீரோ எது ஹீரோயின் என தெரியாமலே நான் படம் பார்த்திருக்கிறேன்" என்று பேச ஒரே ஆரவாரம்.இதனால் சிவகார்த்திகேயன் கொரிய நடிகர்களை கேலி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இது அப்பட்டமான , இனவெறி பேச்சு என ஆங்கில ஊடகங்கள், நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர். ஒருவர் நிறம், இனம், உருவம் பற்றி பேசக்கூடாது என்பது உலக நாடுகள் அளவில் இன்றும் கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கருப்பின மக்களை அவர்களைப்பற்றி குறிக்கும் ஒரு குறிப்பிட்ட சொல்லை பயன்படுத்தக்கூடாது என்பது சட்டம்.


அப்படி இருக்கும்போது உருவக்கேலி, ஆண், பெண், ஒரு நாட்டு மக்களின் இனம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். அதுவும் பள்ளி குழந்தைகள் மத்தியில் ஒரு நாட்டு மக்கள் பற்றி குறிப்பிட்டு பேசியதை நெட்டிசன்கள் இனவெறி பேச்சு என கண்டித்துள்ளனர். 

அத்தோடு இந்தியர்களுக்கு எது உணர்வுபூர்வமானது, உணர்வு பூர்வமற்றது என தெரியாமல் உள்ளனர். கொரியர்கள் ஆண்,பெண் வித்தியாசம் இல்லாமல் இருக்கிறார்கள் ஒரே மாதிரியாக தெரிபவர்களாக இருந்தாலும் அது ஒரு நகைச்சுவையா? இது எப்படி இருக்கிறது என்றால் தமிழர்கள் நிறம், மொழி பற்றி வடக்கர்கள் கிண்டலடிப்பது போல் உள்ளது என  ஆங்கில ஊடகங்கள் பதிவு செய்து விமர்சித்து வருகின்றன.


Advertisement

Advertisement