விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கின்றார். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் இயக்குனர் பாண்டிராஜால் அறிமுகமானார்.
மேலும் அதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் நூறு கோடி வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது.
இவ்வாறுஇருக்கையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம் 13-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். மேலும் இப் படம் பற்றி பேசிய சிவகார்த்திகேயனிடம், பாடல் எழுதி வாங்கும் சம்பளத்தை நா.முத்துக்குமார், குடும்பத்துக்கு கொடுப்பது ஏன் என்பது பற்றி கேட்கப்பட்டது.
அப்போது அவர் தெரிவிக்கையில் , `
“மறைந்த பாடலாசிரியர், நா.முத்துக்குமாரின் பெரிய ரசிகன் நான். அவர் சிறந்த கவிஞர். கல்லூரி காலங்களில் அவர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்களைத்தான் எப்போதும் கேட்பேன். அந்தக் காலகட்டத்தில் என் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டது அவர் பாடல்கள்தான். அவரை இரண்டு முறைதான் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
அவர் மறைந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் உடலின் அருகில் அவர் குழந்தைகளைப் பார்த்ததும் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மேலும் நான் சிறந்த பாடலாசிரியன் இல்லை. அவருக்கு அஞ்சலியாக இருக்கட்டும் என்று, நான் எழுதும் பாடல்களுக்கு கிடைக்கும் சன்மானத்தை அவர் குடும்பத்துக்கு கொடுத்து வருகிறேன். தொடர்ந்து அதை செய்வேன்'' என்று குறிப்பிட்டார்.
பிறசெய்திகள்:
- OTT தளத்தில் வெளியாகப்போகும் KGF- 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்..!
- கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா
- தளபதி 66 இல் விஜய்யுடன் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட்
- மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா-லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சக்தி சொன்ன வார்த்தைகளால் உச்ச கட்ட பதற்றத்தில் பாரதி- ஆறுதல் சொன்ன சௌந்தர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!