• Sep 21 2024

வசூலில் தளபதிக்கே தண்ணி காட்டிய சிவகார்த்திகேயன்... வெற்றிநடை போடும் 'மாவீரன்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்தாலும்  தன்னுடைய சிறப்பான திறமை மற்றும் திட்டமிடல் மூலம் தற்போது சிறப்பான உயரத்தை பிடித்துள்ளார். கோலிவுட்டில் விஜய், அஜித்திற்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கின்றார். இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அந்தவகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக முதல் நாளில் அதிக கலெக்‌ஷன் அள்ளிய படம் என்ற சாதனை இப்படம் பெற்றுள்ளது. அத்தோடு இரண்டாம் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.34 கோடி வசூலித்த இப்படம், மூன்றாம் நாளில் ரூ.10.57 கோடி வசூலித்து தமிழகத்தில் மட்டும் மூன்றே நாட்களில் ரூ.27.52 கோடி வசூல் செய்து அசுர வேட்டை நடாத்தி வருகின்றது.


இந்நிலையில் வெளியான நாள் முதல் தற்போது வரை உலகளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வரும் இப்படம், விஜய்யின் வாரிசு பட வசூல் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது விஜய்யின் வாரிசு படம் இரண்டாம் நாளில் அமெரிக்காவில் ரூ.4 கோடி வசூலித்த நிலையில், மாவீரன் திரைப்படம் இரண்டாம் நாளில் மட்டும் அதைவிட ரூ.1 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழகத்திலும் விஜய்யின் வாரிசு படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாளில் ரூ.8.75 கோடி மட்டுமே வசூலித்த நிலையில், மாவீரன் படம் இரண்டாம் நாளில் ரூ.9.34 கோடி வசூலித்து தமிழக பாக்ஸ் ஆபிஸிலும் விஜய்யை பின்னுக்கு தள்ளி தளபதிக்கே தண்ணி காட்டியுள்ளது. இதனால் பலரும் சிவகார்த்திகேயனுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement