• Sep 20 2024

பிரபல நடிகரின் டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி வாரியர். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகர் ராம் பொத்தினேனி.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கின்றார். மேலும் அக்ஷரா கவுடா, ஆதி பினிசெட்டி, ஸ்ரீனிவாச சில்வர் ஆகியோரும் ஸ்கிரீன் பேனர் சார்பில் ஸ்ரீனிவாச பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகின்றது.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தி வாரியர் திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தி வாரியார் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement