• Sep 20 2024

மாவீரன் ஆடியோ லாஞ்சில் பட்டையைக் கிளப்பிய சிவகார்த்திகேயன்-ட்ரெண்டாகும் டான்ஸ் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இப்போது தமிழ்த் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

சிவகார்த்தியேனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் மாவீரன் படத்தில் நடித்துள்ளனர். 1970, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரிதா, இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட சரிதா, சிவகார்த்திகேயனை ஒரு குட்டி ரஜினி எனக் கூறி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் லுக், அவர் பேசும் ஸ்டைல் போன்றவற்றை பார்க்கும்போது ரஜினிகாந்த் போலவே இருக்கிறார் எனக் கூறியுள்ளார். அதானால் சிவாவை குட்டி ரஜினி என்றே அழைப்பேன் எனவும் சரிதா பேசினார்.

இது ரசிகர்களிடையே ட்ரெண்டிகாக பேசப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பரக நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது. இவருடன் அதிதி ஷங்கரும் நடனமாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement