• Sep 20 2024

இயக்குநர் மிஷ்கினுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. ஆனால் அது அவருடைய இயக்கத்தில் இல்லையா?

tech / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து எஸ்கே அனுதிப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரேன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மற்றும் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், யோகிபாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வினுடன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இயக்குநர் மிஸ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்,. இப்படத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement