• Sep 21 2024

சிவகார்த்திகேயன் VS விஜய் சேதுபதி- அடடே அடுத்த படம் ஹிட் தான் போல..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் பரலாலும் விரும்பப்படும் நடிகர்கள் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.

சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் அப்படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதி விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கெமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமீபத்தில் கூட அவரின் பாலிவுட் திரைப்படமான merry chirtmas திரைப்படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் ஒரு கூட்டணி அமையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இது வதந்தியாகவும் இருக்க கூடும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement