• Sep 20 2024

சோப் விளம்பரத்தில் நடித்த சிவகார்த்திகேயன்... அதுவும் இந்த நடிகை கூடவா..? வைரலாகும் வீடியோ பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சித் தொகுப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையினால் படிப்படியாக உயர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் 'மெரீனா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பல ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டிருக்கின்றார்.



இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் 'பிரின்ஸ்'. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாவீரன்'. மடோன் அஸ்வின் இயக்கத்தில் அமையப்பெற்ற இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த விளம்பரப் படம் ஒன்று இணையத்தில் கசிந்திருக்கின்றது. அதாவது சிவகார்த்திகேயன் இதுவரை சில துணிக்கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார்.


ஆனால் இவர் திரையுலகில் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்னர் பிரபல சோப் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இவருடன் இணைந்து த்ரிஷாவும் நடித்திருக்கின்றார். அதாவது பல ஆண்டுகளுக்கு முன் சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார். 

Advertisement

Popular articles

Advertisement

Advertisement

Advertisement