• Sep 20 2024

மீண்டும் தயாரிப்பாளராகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன்... அதுவும் எந்தப் படத்தில் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயனாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பில் மட்டுமல்லாது நகைச்சுவையிலும் சிறந்து விளங்கி வருகின்றார். அதுமட்டுமல்லாது சில படங்களை சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார். 


அந்தவகையில் இவரது தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்தும் இருந்தார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. 


இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தை சிவகார்த்திகேயனே டைரக்டு செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. அதாவது இது குறித்து கிரிக்கெட் வீரர் நடராஜன் அளித்துள்ள பேட்டியில், ''எனது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராக உள்ளது.

அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார். அதுமட்டுமன்றி அந்த படத்தை சிவகார்த்திகேயனே டைரக்டு செய்ய உள்ளார்" என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். 


மேலும் தமிழ் சினிமா உலகில் பல நடிகர்கள் டைரக்டராகி உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனும் ஒருவராக இணைகிறார்.

Advertisement

Advertisement