சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்பொழுது புதிய படம் ஒன்றினை இயக்க திட்டமிட்டுள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா முரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே உத்தியோபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்து.
மேலும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ரஜினிகாந்த் மறுப்புத் தெரிவித்தாராம். இருப்பினும் ஐஸ்வர்யாவின் வேண்டுகோளுக்கிணங்க 20 நிமிடங்கள் மட்டுமே நடிப்பதற்கு ஓகே சொல்லி விட்டாராம்.
விரைவில் இந்த படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை அனுகியதாகவும், ஆனால் அவரிடம் தேதிகள் இல்லாததால் அவர் நடிக்க மறுத்ததால், அந்த வாய்ப்பு அதர்வாவுக்கு சென்றுள்ளதாகவும் இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.
Listen News!