• Nov 17 2024

சிறுவயது கனவு நிறைவேறி விட்டது... துள்ளி குதித்த டிடி – காரணம் இதுதானாம்!

dd
Jo / 1 year ago

Advertisement

Listen News!

1990 இல் 'சுபயாத்ரா' என்கிற மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒரு குட்டி பொண்ணு, 1999-ல் விஜய் டிவியின் 'உங்கள் தீர்ப்பு' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஆடிஷனில் கலந்து கொண்டு ஒரு 'சைல்ட் ஆங்கர்' ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அது வேறு யாருமில்லை டிடி என்கிற திவ்யதர்ஷினி தான்.

மேலும்,இவர் தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு வந்து விட்டார். பின் திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். அதன் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

அப்படியே டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

மேலும், இவர் தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து இருக்கிறார். இதனிடையே டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி டிடி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் டிடி தன்னுடைய ரசிகர்களுக்கு பல முறை மோட்டிவேஷன் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் தான் பல நாட்களாக கண்ட கனவு தற்போது நிறைவேறி உள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் டிடி பேசுகையில் தான் சிறுவயதில் ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டியில் படிக்க வேண்டும் என்று ஆசை பட்டதாகவும், ஆனால் தற்போதுதான் இந்த யூனிவெர்சிட்டிக்கு வந்துள்ளதால் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக கூறி குழந்தை போல துள்ளி குதிக்கிறார். மேலும் டிடி அந்த யூனிவெர்சிட்டியில் பெருமைகளை கூறிவருகையில் தான் இந்த வாய்ப்பை விட்டுவிட்டதாகவும், பின்னர் வரும் மாண்வர்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் உணர்வை வார்த்தைகளினால் சொல்ல முடியாது என்றும், நான் இங்கே படிக்க முடியவில்லை என்றாலும் இங்கே வந்து மற்றவர்களுக்கு அறிவுரை கூறவாவது முடிந்துள்ளது என்றும், இந்த பதிவை டாசன் மற்றும் பிரபாகன் தயவு செய்து பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு அனுப்புமாறும் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement