• Sep 21 2024

100 கோடி வசூலைப் பெறும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்- செம கொண்டாட்டத்தில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். இவர் சமீபகாலமாக தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து காணப்படுகின்றது.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் தான் டான். இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போது பாக்ஸ் ஆபீஸில் வசூலில் அள்ளிக் குவித்து வருகின்றது.

தமிழில் கடைசியாக வெளியான முன்னணி நடிகர்களை விட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருகின்றது.

டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.48 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மேலும் தற்போது இப்படத்தின் உலகளவிலான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி டான் தற்போது வரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததை தொடர்ந்து டான் திரைப்படமும் 100 கோடி வசூலைப் பெறும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement