வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இப்படத்தினை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருப்பதோடு ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, ஷிவாங்கி என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இவ்வாறுஇருக்கையில் முதல் நாளில் இருந்தே படத்தின் வசூலுக்கு குறையே இல்லை. 4 நாளிலேயே படம் ரூ. 50 கோடி வரை வசூலித்தது. தற்போது என்ன தகவல் என்றால் படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி முதன்முறையாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரகனி-சிவகார்த்திகேயன் காட்சிகள் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது என்று தான் கூற வேண்டும்.
காமெடி, சென்டிமென்ட் என எல்லா கலந்த கலவையாக படம் அமைய குடும்பத்துடன் பலரும் வந்து படத்தை காண்கின்றனர்.
பிற செய்திகள்:
- தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளா…வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!
- நடுரோட்டில் அடித்துக் கொண்ட பிக்பாஸ் பிரபலம் மற்றும் யூடியூபர் -தீயாய் பரவும் வீடியோ..!
- அஜித்தை பற்றி பல விடயங்களை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் பிரபல நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!