• Sep 20 2024

மாவீரன் படத்தை மோசமான கெட்ட வார்த்தையால் திட்டிய ப்ளூ சட்டை மாறன்- கடும் கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மண்டேலா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் மடோன் அஸ்வின். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.இப்படம் தேசிய விருதினையும் பெற்றது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது மாவீரன் படத்தின் கலெக்ஷன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு இருந்தது. அதில் மாவீரன் திரைப்படம் இதுவரை சுமார் 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.


தற்போது இதை உதாரணம் காட்டி டுவிட் ஒன்றை போட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அந்த பதிவில் அவர் OVOP கூறியுள்ளார். இணையதள மொழியை பொறுத்தவரை OVOP என்பது மிகப்பெரிய கெட்டவார்த்தை என்பதை பலர் அறிவர்.மாவீரன் படத்தின் வசூலை குறித்து ப்ளூ சட்டை மாறன் இப்படி ஒரு கமெண்ட்டை செய்த நிலையில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவரை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.


மேலும் இது தவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படமும் வெளியாகவுள்ளது.இது தவிர கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகின்றார்.

Advertisement

Advertisement