• Sep 20 2024

வெளியாகிறது 'அயலான்' பட டீசர்... அதுவும் எப்போ தெரியுமா..? குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் 'அயலான்'. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக 'அயலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக பலமுறை இதன் படப்பிடிப்பு தடைபட்டது. எது எவ்வாறாயினும் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக அயலான் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். 


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது 'அயலான்' படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Advertisement