• Sep 20 2024

மாஸ் வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் மாவீரன்.. இதுவரை எவ்வளவு வசூல்?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு சிவகார்த்திகேயன், மண்டேலா படம் மூலம் திரையுலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த வெற்றி இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் கைகோர்த்து  வெளியான திரைப்படம் தான் மாவீரன்.

ஃபேண்டஸி ஜானரில் கதைக்களம் இருந்தாலும் மிகவும் எதார்த்தமாக ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் விதத்தில் மடோன் அஸ்வின் இயக்கியிருந்ததால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 


அதேபோல் யோகிபாபுவின் காமெடியும் பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் தியேட்டரில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமலும் இருந்தது.குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்புக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். 

அனைத்துக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாழலாம் என்ற பயந்த சுபாவம் உள்ள கேரக்டராகவும், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் ஆக்ரோஷமாகவும் அவரது ட்ரான்ஸ்பர்மேஷன் ரசிக்கும்படியாகவே இருப்பதாக பலரு கூறுகின்றனர்

ரூ. 35 கோடி பட்ஜெட்டில் கடந்த ஜுலை14ம் தேதி வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 60 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement