சரிதா கே. பாலச்சந்தரால் 1978 இல் மரோ சரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 இல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அதன் பின்னர் கெ.பாலச்சந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப் படத்தில் அதே ஆண்டு நடித்தார்.
அந்தப்படம் தப்புத் தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது சரிதா பாலச்சந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலச்சந்தர் இவரை நடிக்கச் செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பாலச்சந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.
இதனை தொடர்ந்தே சமீபத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவரின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ட்ரெண்டிங் ஆனார். இவர் இன்றய தினம் இவரது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!