• Sep 20 2024

தனது முதலாவது படத்தில் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்... வெறும் இத்தனை ரூபாய் மட்டும் தானா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பிற்கும் நகைச்சுவைக்கும் மயங்காதவர்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார்.


முதலில் சின்னத்திரையிலேயே தனது பயணத்தைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று வெள்ளித் திரையில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்றார். அந்தவகையில் இவர் நடிப்பில் கடைசியாக 'பிரின்ஸ்' என்ற திரைப்படம் வெளிவந்தது.


அதனைத் தொடர்ந்து தற்போது 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 15 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகின்றமை நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.


இந்நிலையில் இவர் தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பள விபரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் வெறும் ரூ. 10 ஆயிரம் மட்டும் தான் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement