• Sep 20 2024

ராம்சரண் பட டைட்டிலை களவாடிய சிவகார்த்திகேயன் படக்குழு- வெளியாகிய புதிய படத்தின் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியாக மூன்று திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகனாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அந்த வகையில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகின்றார். அத்தோடு இப்படத்திலிருந்து சில அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்து ‘ரங்கூன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. கமல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்றும் கூறப்படுகின்றது.

அதேநேரம் யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி படத்திற்கு முன்னர் மடோன் அஸ்வின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.பிரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்ற இந்தபடத்தின் தொடக்க விழா வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து விரைவில் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement